துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கியதால் பொதுக்குழுவை புறக்கணிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு!

துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கியதால் பொதுக்குழுவை புறக்கணிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு!

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் 2022 -ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரவண்டா நாட்டின் தலைநகர் கிஜா லியில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது வேண்டும்.

என்று  காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் மண்டலத் துணை தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ரவீவ் மேக்தா மற்றும் விளையாட்டு கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நம்தேவ் ஷிராகாவ்கர் ஆகியோர் மனுவை வாபஸ் பெறுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவு காமன்வெல்த் சம்மேளன விளையாட்டு தலைமை செயல் அதிகாரி டேவிட் கிரிவெம்பெர்க்கு  கடிதம் மூலம்  கூறினர்.

author avatar
murugan
Join our channel google news Youtube