பொங்கல் முடிந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது..

பொங்கல் முடிந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது..

  • எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் நான்கு மீனவர்கள் கைது.
  • பொங்கல் முடிந்து திரும்பியவர்களுக்கு இலங்கை கொடுத்த பொங்கல் பரிசு.

தை பொங்கல் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, நேற்று காலை  96 விசைப்படகுகளில் மீன்வள துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு அதிவேகமாக  வந்தது.

Image result for நள்ளிரவில் இலங்கை கடற்படை கைது

இதைப்பார்த்த பல மீனவர்கள் கடற்படைக்கு பயந்து தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் அங்கு, பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதனை சிறைப்பிடித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த படகில் மீன் பிடிப்பதற்காக  இருந்த பாரதி , அசோகன், சக்தி குமார் , மணி  ஆகிய 4 பேரும் இலங்கை கடற்படையிடம் நாங்கள் எங்கள் கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறினர். ஆனாலும், இலங்கை கடற்படையினர், இது இலங்கைக்கு சொந்தமான பகுதி, இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும்.

Image result for இலங்கை கடற்படை கைது

மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.பின், அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்கள் உட்பட அனைத்தையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும். அதன்பின்னரே புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube