அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் ‘திடீர்’ தடை.! ஒரு சேனலை தவிர…

இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை நேபாளம் அரசு திடீரென உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், அந்த இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் நேபாள அரசு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கூட வழங்கப்பட்டிருந்து.

இதனை தொடர்ந்து இந்திய – நேபாள அரசுகளுகளுக்கிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. நேபாள அரசு சீனாவுடன் கைகோர்த்து இந்தியாவை சீண்டுகிறது என ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் திடீரென நேபாளத்தில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு செய்தி சேனலான தூதர்சன் மட்டும் தற்போது நேபாளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.