குளோபல் மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற தமிழக இளம்பெண்..!

குளோபல் மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற தமிழக இளம்பெண்..!

  • தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
  • மேலும், ஜூலை மாதம் சிங்கபூரில் நடைபெறும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பாஷினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 5 நாள்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டி தனியார் அமைப்பு சார்பில் நடந்தது. இதில் சென்னை கல்லூரி மாணவி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 5 நாள்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டி நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா 19 வயது இளம்பெண் உட்பட 3 பேர் பங்கேற்றனர். இதில் நீச்சல், நடனம், திறனறிவு, உடல் தகுதி, யோகா என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாஷினி பாத்திமா 2020-ம் வருடத்திற்கான குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி பட்டத்தை வென்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்த இளம்பெண் மாடலிங் போட்டிகளில் பங்கேற்க தமிழகப் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு இந்தத் துறையின் மீது உள்ள தவறான எண்ணம்தான் காரணம். அந்த எண்ணம் மாற வேண்டும். தமிழக பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தெரிவித்தார். மேலும், ஜூலை மாதம் சிங்கபூரில் நடைபெறும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், பாஷினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பாஷினி பாத்திமாவின் தந்தை ஜெ.எம்.பஷீர் கூறுகையில், என்னுடைய இரண்டு மகள்களும் மாடலிங் துறையில் உள்ளனர். மிஸ் சென்னை போட்டியில் என்னுடைய இரண்டாவது மகள் பங்கேற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றாள். தற்போது என் மூத்த மகள் பாஷினி பாத்திமா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார் என்று கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube