ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் வீரரை வாழ்த்திய இந்திய தடகள சம்மேளனம்..!

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் வீரரை வாழ்த்திய இந்திய தடகள சம்மேளனம்..!

  • 2020-ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டிக்கு  தகுதி பெற 85 மீட்டர் ஈட்டி எறியவேண்டும் .
  • பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்து தகுதி பெற்றார்.

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறித்தலில்  தங்கம் வென்று 2020-ம்  ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற  நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்தார். இந்தியா வீரர்  சிவ்பால் சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக்போட்டிக்கு  தகுதி பெற 85 மீட்டர் ஈட்டி எறியவேண்டும் .

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்து.அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான நேரடித் தகுதியையும் பெற்றார். ஆனால் இந்திய வீரர்  சிவ்பால் 84.43 மீட்டர் வரை ஈட்டியை  தூக்கி எறிந்து தகுதியை இழந்தார்.

இந்நிலையில் இந்திய தடகள சம்மேளனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளது. அதில் வாழ்த்துக்கள் பாகிஸ்தானின் ஈட்டி நட்சத்திரம் அர்ஷத் நதீம்  86.48 மீ ஈட்டி எறிந்து டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதி பெற்ற முதல் பாகிஸ்தான் விளையாட்டு வீரர் என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube