எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

Default Image

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்து பணிகளை  இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

நம் அண்டை நாடான சீன நமக்கு மிகவும் குடைச்சல் கொடுத்துவரும் நாடு. இந்த நாட்டை குடியரசாக உலகில் முதன்முதலில் அங்கிகரித்த நாடு இந்தியா. ஆனால் அந்த நன்றியை மறந்த சீன இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு 1962 இல் முதுகில் குத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றளவும் லடாக் யூனியன் பிரதேசத்தின் அகாசின் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே தொடர்பு மற்றும் போக்குவரத்து சிக்கிம் மாநிலத்தின்  கீழ் பகுதியிலிருக்கும் டார்ஜிலிங் வழியாகத்தான். இந்த இடத்தை துண்டித்தால் வடகிழக்கு மாநிலங்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இதற்காகவே  சீனா  டோகாலாம் பிரச்சனையை ஏற்கனவே ஏற்படுத்தியது.
கொதிநிலை தணிந்த எல்லைப் பதற்றம் ...
அதன் பிறகு தற்போது நடக்கும் பிரச்சனை மேலும்  தீவிரமாகி வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன எல்லைக்குள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு இந்திய தரப்பில்  பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது மோதல் நீடித்து வரும் நான்கு முக்கிய இடங்களுள் சிக்கிமில் உள்ள நாகு லா என்ற இடமும் ஒன்று.இது தவிர பாங்கொங் ஏரி, கல்வான் ஆற்றுப்பகுதி மற்றும் லங்மார்போ ஆகிய பகுதிளிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்த பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் அதிக படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே மே 5ம் தேதி பாங்கோங் ஏரியிலும், மே 9ல் நாகுலா பகுதியிலும் மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா கட்டுமானம் ஏற்படுத்தி வருவதாக சீனா கூறி வருகிறது. முன்னதாக சீனாவின் மாவோ இந்தியா மீது போர் தொடுத்த போது அதற்கு இங்கிருந்து ஆதரவு அளித்த ஒரு கட்சி இரண்டாக பிளந்ததை அனைவரும் அறிவார். எனவே  இந்தியா-சீனா விவகாரத்தில் இந்தியர்களாக  இந்திய உணர்வுடன் இந்த விவகாரத்தை அனுகவேண்டும் என்பதே இந்திய உணர்வுள்ள அனைவரது கோரிக்கையாகும்.

Join our channel google news Youtube