80 நாட்களில் தயாராகிறதா இந்தியன் 2?! யாரெல்லாம் நடிக்கிறார்கள்?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்  நாயகனாக நடிக்க உள்ளார். மேலும், சித்தார்த், ப்ரியா பவானிசங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல்அகர்வால் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.

இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாயில் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இப்படத்தை 80 நாட்களில் முடிக்க  தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாம். ஆனால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தரப்பு அது எப்படி சாத்தியமாகும் என புலம்பி வருவதாவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கிடையில், உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகி உள்ளதால், படம் என்னவாகிறது என்பதை அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.