தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது - வெங்கையா நாயுடு

சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று

By Fahad | Published: Apr 02 2020 08:01 PM

சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள்.வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம். குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மொழி, கலாசாரம் ஆகியவற்றை மறந்து விடாதீர்கள்; அதே நேரம் மற்றவர்களின் நம்பிக்கையுடன் சண்டையிடாதீர்கள் என்று பேசினார்.