முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : வங்சதேச அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர்.

அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தவான் 35 ரன்கள் எடுத்துதிருந்த போது ஆட்டமிழந்தார். தவான் விக்கெட்டையும் பறிகொடுக்கும் போது இந்திய அணி 9.5 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ரெய்னா அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் ரோகித் தனது அரைசத்தை  பதிவு செய்தார். இதற்காக அவர் 42 பந்துகளை எடுத்துக்கொண்டார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து விளாசினார்.

20ஓவர் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் 89 ரன்களும் ரெய்னா 47ரன்களும் குவித்தனர்.

அடுத்து களமிறிங்கிய பங்களாதேஷின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 27 ரன்கள் குவித்தான். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க முஷ்ஃபிகுர் ரஹிம் அதிரடியாக 72 ரன்கள் குவித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட் இழப்பு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment