'கிங்' கோலியின் அசுர ஆட்டம்! 19-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீசை பந்தாடிய இந்தியா!

'கிங்' கோலியின் அசுர ஆட்டம்! 19-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீசை பந்தாடிய இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று முதல்  டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 207அடித்தனர். இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டைபறித்தார். இதைத் தொடர்ந்து 208 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேற பின்னர் கே.எல் ராகுல் , விராட் இருவரும் கூட்டணியில் இனைந்து அணி  எண்ணிக்கையை உயர்த்தினார்.  நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 62 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய ரிஷப் பண்ட் நிலைத்து நிற்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறப்பாகவும் , அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார். இந்நிலையில் விராட்கோலி கடைசிவரை களத்தில் நின்று 50 பந்தில் 94 ரன்கள் குவித்தார். அதில் 6 சிக்சர்,6 பவுண்டரி அடங்கும் .இதன் மூலம் இந்திய அணி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

Latest Posts

புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை...?