இந்திய அணிக்கு இமாலய இலக்கு ! 200 ரன்களுக்கு மேல் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி

முதலாவது டி -20  போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 207 ரன்கள்  எடுத்ததுள்ளது. இந்திய

By venu | Published: Dec 06, 2019 08:38 PM

முதலாவது டி -20  போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 207 ரன்கள்  எடுத்ததுள்ளது. இந்திய அணி  மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 டி -20 போட்டிள் நடைபெற்றவுள்ளது.இன்று இரு அணிகளுக்குமான முதலாவது டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க சிம்மன்ஸ் சரியான தொக்க ஆட்டத்தை கொடுக்காமல் 2 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் தங்களது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார்கள்.இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து  207 ரன்கள்  எடுத்ததுள்ளது.மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 56 ,லீவிஸ் 40 ரன்கள் அடித்தார்கள்.இந்திய அணியின் பந்துவீச்சில் சாகல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.  
Step2: Place in ads Display sections

unicc