இந்தியா-நியூசிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியில் 17.3 ஓவர்களில் அதிரடி வெற்றி.. இந்தியா அபாரம்…

  • இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டியில் இந்தியா அதிரடி வெற்றி.
  • 7.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தற்போது  வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளின் வீரர்களும்  மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 7.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து இந்திய அணி  வெற்றி  பெற்றது.

author avatar
Kaliraj