10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் அதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது -பில்கேட்ஸ்

பில்கேட்ஸ் அவர்கள் உலகின் முதல் பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார். தற்போது, இந்திய பொருளாதார நிலை மந்தநிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவிலுள்ள ஆதார் சேவையை வெகுவாக பாராட்டியுள்ள அவர், நிதி சேவை மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.