5-வது கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்கள்.!

கடந்த ஜூன் 15 ம் தேதி லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது, மேலும் சீனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

ஜூன் மாதம் மோல்டோவில் மூத்த இந்திய மற்றும் சீன தளபதிகளுக்கு இடையிலான மராத்தான் சந்திப்பின் போது எல்.ஐ.சி உடன் அனைத்து  பகுதிகளிலிருந்தும் வெளியேற பரஸ்பர ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 11 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகள் பதட்டங்களைத் தணிப்பதையும், எல்லையின் இருபுறமும் இராணுவ கட்டமைப்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடைப்பெற்றது.

லேவை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சின்ஜியாங் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 5-வது கட்டமாக இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்களும் பங்கேற்கின்றனர். கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

author avatar
murugan