பேட்டிங்கில் திணறிய இந்தியா! 224 ரன்னில் சுருட்டிய ஆப்கானிஸ்தான்!

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான்

By Fahad | Published: Apr 03 2020 04:02 PM

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , லோகேஷ் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும்  சொதப்பலாக விளையாடினர். ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா 1 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை  சற்று உயர்த்தினர். ஆனால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் திணறிய ராகுல் 30 ரன்களில் வெளியேறினார். பிறகு கேப்டன் விராட் கோலி தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.விஜய் சங்கர் 29 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக இறங்கிய தோனி , கோலி நிதானமாக விளையாட 30-வது ஓவரில் ரஹ்மத்திடம் கோலி தனது கேட்ச்சை கொடுத்தார். பின்னர் களமிறங்கிய டோனி 28 , ஹர்திக் பாண்டிய 7 ,முகமது ஷமி 1 ,கேதார் ஜாதவ் 52 ரன்களுடன் வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் முகமது நபி 2 விக்கெட்டை பறித்தார்.225 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது .