சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

அடுத்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி, இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஷ்ரேயாஸ் 70 ரன்னில் வெளியேற, ரிஷாப் பண்ட் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார். Image அடுத்து கேதார் ஜாதவ் தனது பங்குக்கு 40 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தனர். அடுத்து 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க முதலே நிதானமான ஆட்டத்தை ஆரம்பித்து தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் 102 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். சுனில் அம்பரீஷ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹெட்மர் ருத்ர தாண்டவம் ஆடினார். ஹெட்மர் 106 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்ஸர் என 139 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற உதவினார். ஹெட்மருக்கு பிறகு பூரான் 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற செய்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் ஹோப் 102 ரன்களுடனும் பூரான் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து 47.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ் இண்டீஸ் அணி அசுர வெற்றியை பதிவுசெய்துள்ளது.]]>

Latest Posts

டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!