சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடு வருகின்றனர். முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இன்று 3 போட்டிகள் ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். அதில் கே.எல்.ராகுல் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 4 ரன்களில் அவுட் ஆகினார்.  ரோஹித், 36 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

Image

அடுத்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி, இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஷ்ரேயாஸ் 70 ரன்னில் வெளியேற, ரிஷாப் பண்ட் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

Image

அடுத்து கேதார் ஜாதவ் தனது பங்குக்கு 40 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தனர்.

அடுத்து 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க முதலே நிதானமான ஆட்டத்தை ஆரம்பித்து தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் 102 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். சுனில் அம்பரீஷ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹெட்மர் ருத்ர தாண்டவம் ஆடினார். ஹெட்மர் 106 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்ஸர் என 139 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற உதவினார். ஹெட்மருக்கு பிறகு பூரான் 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற செய்தனர்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் ஹோப் 102 ரன்களுடனும் பூரான் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து 47.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 291 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ் இண்டீஸ் அணி அசுர வெற்றியை பதிவுசெய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube