இந்திய தூதரக அதிகாரிகள் குற்றச்சாட்டுக்குப் பாகிஸ்தான் மறுப்பு!

அரசு இணையத்தளங்களைப் பார்க்கவிடாமல்  இந்தியத் தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் தடை செய்வதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இந்திய அரசின் இணையத்தளங்களைப் பார்க்க முடியாத வகையில் அவற்றைப் பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் பாகிஸ்தானியர்கள் இந்திய விசாக்கள் பெறுவதற்கான படிவங்களைப் பெறமுடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் குறைகூறியுள்ளனர்.

அவ்வாறு தூதரக அதிகாரிகள் அரசு இணையத்தளங்களைப் பார்க்கும் வசதியைத் தடை செய்யவில்லை எனப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் நடைபெறஉள்ள உலக வாணிப அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment