அதிகரிக்கும் போலி முகவரிகள்.. கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ..ராஜஸ்தான் அதிரடி.!

அதிகரிக்கும் போலி முகவரிகள்.. கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ..ராஜஸ்தான் அதிரடி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சோதனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைக்கு வரும் பலர் தங்கள் உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் நபருக்கு ஆர்டி-பி.சி.ஆர் செயலியில்  ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது.

மேலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் குடும்ப உறுப்பினர்களின் வேறு யாருடைய ஆதார் அட்டை காட்டி பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்கு ஆதார் அட்டை  இல்லை என பரிசோதனை மறுக்கப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.

போலி முகவரி! போலி மொபைல் நம்பர்.! 3,338 கொரோனா நோயாளிகளை காணவில்லை.!

புதிய வழிகாட்டுதல்களின்படி, சோதனை ஆய்வகங்களில் 24 மணி நேரத்திற்குள் கொரோனா சோதனை முடிவுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. ஒரு நாளில் 40,000 க்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகளை சோதிக்கும் வசதி அம்மாநிலத்தில் உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, ராஜஸ்தானில் மொத்தம் 35,298 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,306  கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 613 பேர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

Latest Posts

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப்