ரூ.170 கோடி வாங்கியதாக காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்..!

கடந்த மாதம் வருமானவரித்துறையினர் டெல்லி , மும்பை ,ஹைதராபாத்,ஈரோடு , புனே,ஆக்ரா

By murugan | Published: Dec 05, 2019 07:34 AM

கடந்த மாதம் வருமானவரித்துறையினர் டெல்லி , மும்பை ,ஹைதராபாத்,ஈரோடு , புனே,ஆக்ரா ,கோவா உள்ளிட்ட  நகரங்களில் 42 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ரசீது கொடுத்தும் , ஹவாலா முறையிலும் ரூபாய் 3,300 கோடி பணம் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங்  நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் முறைகேடாக ரூ.170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திராவை சார்ந்த ஒரு பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் ரொக்கமாக கொடுக்கப்ட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நேற்றுமுன்தினம் நோட்டீஸ் அனுப்பியது இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc