தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…

கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதாவது:தேர்தலின்போது நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றிருந்த செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல்,  என் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலே, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும், மஹாராஷ்டிரா அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கும், இதுபோல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் மீது வருமான வரித்துறைக்கு அதிகமான பாசம் உள்ளது. அதனால் தான், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியதால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது, நல்ல நகைச்சுவை. அதற்கான சூழல் எதுவும் தற்போது ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

author avatar
Kaliraj