முட்டையை அதிகமாக உங்களுடைய உணவில் சேர்த்து கொள்வீர்களா ! அப்ப உங்களுக்கு இந்த நோய் கண்டிப்பாக வரும் !

இன்றைய காலகட்டத்தில் நாம் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தால் அதிகமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.அந்த வகையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று கொலஸ்ரால் இதனால் நாம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இரத்த அழுத்தம் ,இதய நோய் ,மாரடைப்பு முதலிய பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இந்த பதிப்பில்   அதிகமாக முட்டை நமது உணவில் தினமும் சேர்த்து கொள்வதால் என்னென்ன பாதிப்பு நேரும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு முட்டைக்கு அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு கண்டிப்பாக இதை நோய் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒரு நாளைக்கு நாம் 2 முட்டைகளுக்கு மேல் சாப்பிடும் போது கொலஸ்ரால் நமது உடலில் அதிகமாக சேர்க்கிறது. இதனால் நமக்கு 17 சதவீதம் இதய நோய் வருவதற்கான  வாய்ப்பும் 18 சதவீதம் உயிரிழப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.