தஞ்சையில் மாற்று கட்சியினர் அதிமுக_வில் இணைந்தனர்...!!

தஞ்சையில் திமுக , அமமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். தஞ்சை

By Fahad | Published: Apr 06 2020 09:03 PM

தஞ்சையில் திமுக , அமமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று திமுக , அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.இந்த இணைப்பு விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் ஜவஹர் சக்திவேல், மணிகண்டன் மற்றும் அவரின் தொடர்கள் பலரும் அதிமுக கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Posts