தளபதி 63 படப்பிடிப்பில் நேர்ந்த கோர விபத்து சோகத்தில் உறைந்த படக்குழுவினர்

தளபதி விஜய் நடிப்பில் தற்போது “தளபதி 63” படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் அட்லீ என்பவர் இயக்கி  வருகிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிக பெரிய கால்பந்தாட்ட செட் அமைத்து நடந்து வருகிறது. தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து  நேர்ந்துள்ளது.

ஃபோக்கஸ் லைட் தவறி கீழே விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.உடனே அவரை படக்குழுவினர் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு  மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Comment