அடுத்து 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு...!சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது

By venu | Published: Nov 22, 2018 12:34 PM

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னைக்கு இதுவரை 45 சதவீதம் குறைந்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது.வடதமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது மீனவர்களுக்கு எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ. மழைப்பதிவானது என்றும்  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc