4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது - தலைமை தேர்தல் அதிகாரி

4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது என்று

By Fahad | Published: Apr 02 2020 09:12 AM

4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்த மாதம் 19-ந்தேதி 4 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 11 மாற்று ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் .4 தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப்பை ஆவணமாக காட்டி வாக்களிக்க முடியாது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.