மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Tamil must be declared as a compulsory language in central government offices - MK Stalin

மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில்  உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்நாளில் உறுதி ஏற்கிறேன்.இந்தியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

DMK leader MK Stalin says Tamil should be declared as a compulsory language in central government offices. DMK leader Stalin paid tribute to Gayade Millat's memorial in Tiruvallikeni. After meeting with the press, he said today that all central government offices in Tamil Nadu should declare Tamil as a compulsory language.