தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட பொருத்தமானதாக சரி இல்லை...!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணம் பொருத்தமானதாக

By venu | Published: Oct 07, 2018 06:00 AM

தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணம் பொருத்தமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மிசோரம், மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான் , தெலுங்கானா , சத்திஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.பெரிதும் எதிர்பார்க்கபார்ட்ட தமிழகத்தின் திருப்பரங்குன்றம் , மற்றும் திருவாரூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகத்தில் மழை காலம் என்றும் , திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை அளித்ததால் தமிழகத்துக்கு தற்போது தேர்தல் அறிவிப்பு இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணம் பொருத்தமானதாக இல்லை.திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc