இன்னும் 6 மாதத்தில் கட்சி,அடுத்த முதலமைச்சர் ரஜினி தான் – கராத்தே தியாகராஜன்

ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிலும் ரஜினி ஒரு உச்சநட்சத்திரமாகவே போற்றப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்.

இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது  தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும்  இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை.அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்துள்ளார்.ஆனால்  ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் பேட்டி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான். ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார்.2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவார் என்று  கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.