ஐ.நா வில் விதியை மீறி தொடர்ந்து 45நிமிடம் பேசிய இம்ரான் கான் !

ஐ.நா வில் விதியை மீறி தொடர்ந்து 45நிமிடம் பேசிய இம்ரான் கான் !

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெற்ற ஐ.நா சபையின் 74வது பொதுக்கூட்டத்தில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று தங்களது சிறப்பான உரையாற்றினர். இந்நிலையில் இன்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இந்திய வளர்ச்சி, பருவநிலை மாற்றம் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

இதையடுத்து பேசத் தொடங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றங்களை சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இந்தியாவிடம் நட்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறினார்.

இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்தும் தீவிரவாத செயல்கள் குறித்தும் பல நிமிடங்களாக பேசிக்கொண்டே இருந்தார். இதனால் இம்ரான் கானுக்கு போதிய நேரத்தில் தனது உரையை முடிக்க தவறிவிட்டார். இவருக்கு முன்னர் பேசிய தலைவர்கள் அனைவரும் 15 நிமிடங்களில் பேசி முடித்தனர். ஆனால் இம்ரான் கான் மட்டும் தனக்கென ஒதுக்கிய நேரத்திற்கும் அதிகமாக 45 நிமிடங்கள் வரை பேசினார்.

author avatar
Vidhusan
Join our channel google news Youtube