தடுப்பு மருந்தில் முன்னேற்றம்.! குரங்குகளுக்கு சோதனை நடத்தியதில் வெற்றி.! முதல்கட்டம் 10 கோடி.!

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு சோதனை நடத்தியதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 46,28,824 பேர் பாதிக்கப்பட்டு, 3,08,655 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுநோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் உலகமெங்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குகளுக்கு சோதனை நடத்தி பார்த்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், சோதனை நடத்தியதில் விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதால் அந்த குரங்குகள் முழுமையாக குணமடைந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு சோதித்து பார்க்க உள்ளது. இதன் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறுகையில், நாங்கள் தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார். மனிதர்களுக்கு நடத்தும் சோதனை வெற்றி பெற்றுவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு மருந்தினை உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி மூலம் மனிதர்ககளுக்கு நடத்தும் சோதனை அடுத்த மாதம் இறுதிக்குள் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்