முக்கிய செய்தி .! கிண்டியில் சிறுவர் பூங்காவின் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது.!

  •  சிறுவர்களுக்காக முன்பு  இருந்த ரூ.5-ல் இருந்து ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கு முன்பு  இருந்த ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா இந்தியாவில்  8-வது சிறிய தேசிய பூங்கா.இந்த பூங்காவில் 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் , பாலூட்டி சிற்றினங்கள் , 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளது.

இங்கு சிறுவர்களுக்கான பூங்காவும்  உள்ளது. அங்கு  சிறுவர்கள் விளையாட ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்துசெல்கின்றனர்.

இதனால் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுவர் பூங்காவின்  நுழைவுக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.அவர் வெளியிட்ட அறிவிப்பில் சிறுவர்களுக்காக முன்பு  இருந்த ரூ.5-ல் இருந்து ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கு முன்பு  இருந்த ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan