தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்.!

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்.!

தினமும் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்

காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், அதைபோல் இரவில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் இரவில் மற்றும் தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

வாழைப்பழம்: இரவில் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை நீங்கும், மேலும் வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் வலிமையாக செயல்படலாம்.

தர்பூசணி: கோடைகாலத்தில் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம். இந்த பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது ஏனென்றால், இந்த பழத்தில் நீர் சத்து மிகவும் அதிகம், மேலும் இதை காலையில் சாப்பிட்டால் உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்.

பப்பாளி: பப்பாளி பழம் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும், மேலும் பெண்களுக்கு முகம் அழகான தோற்றத்தை கொடுக்கும், ஆனால் இந்த பழத்தை உடலில் அதிகம் வெப்பம் இருப்போர் இந்த பலத்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம், ஏனென்றால் இந்த பலம் வெப்பத்தை அதிகரிக்கும், மேலும் கர்ப்பிணி பெண்கள் யாரும் இந்த பலத்தை சாப்பிடவேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்: ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு விட்டு இரவில் தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் நன்றாக துக்கம் தரும், சிலபேருக்கு தூரத்தில் இருந்து ஏதெனும் ஒரு பொருள் பார்க்கும் பொழுது சரியாக கண் தெரியாமல் இருக்கலாம் அப்படி உள்ளவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் வயதான பிறகு வரும் கண் பிரச்னை நோய்களும் குணமாக்கும் என்று கூறலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube