மாதவிடாய் நாட்களின் பொழுது உடலுறவு கொண்டால் ஏற்படும் முக்கிய நன்மைகள்!

பெண்களின் வாழ்வில் சிறுமி பருவத்திற்கு பின் ஏற்படும் பூப்படைதல் நிகழ்வால் பெண்கள் குமரிகளாகின்றனர். பெண்களுக்கு பூப்படைதல் நிகழ்வை முதன் முறையாக சந்தித்த பின், அவர்தம் வாழ்வின் பெரும்பகுதியை பூப்படைதல் நிகழ்வு ஆக்கிரமித்து விடுகிறது; ஆக்கிரமித்ததோடு மட்டுமின்றி அந்நாட்களில் பெண்களை படாத பாடுபடுத்துகிறது.

இதன் காரணமாக திருமணமான பின், இந்நாட்களின் பொழுது பெண்கள் தங்கள் கணவன்மார்களை விட்டு சற்று தனித்து இருக்கும் நிலை உருவாகிறது. ஆனால் உண்மையில் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் பொழுது ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதனால் பல முக்கிய நன்மைகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன; அந்த முக்கிய நன்மைகள் என்னென்ன என அறிய பதிப்பிற்குள் செல்லுங்கள்!

வலி நிவாரணி!

மாதவிடாய் நாட்களின் பொழுது பெண்கள் சந்திக்கும், வயிறு மற்றும் முதுகு வழிகளில் இருந்து உடலுறவு உணர்வு விடுதலை அளிக்கிறது; அதாவது மாதவிடாயின் பொழுது பெண்கள் தங்கள் துணையுடன் உடலுறவு கொண்டால் பெண்களுக்கு உடலில் ஏற்படும் வலி மறைக்கப்பட்டு, உடலுறவு உணர்வு மேலோங்கி அவர்களுக்கு சுகத்தை வழங்குகிறது.

இதனால் பெண்களால் துணையுடன் நிம்மதியாக உறவு கொள்ளவும், வலியிலிருந்து விடுதலை பெறவும் இயலும்.

மாதவிடாய் காலம் குறையும்

மாதவிடாயின் பொழுது உறவு கொள்வது மாதவிடாய் ஏற்படும் கால அளவை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; மேலும் உதிரப்போக்கும் குறைவாக ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்தரிப்பு தாமதமாகும்!

கருத்தரிப்பு நிகழாமல் உடலுறவு கொள்ள நினைக்கும் தம்பதியருக்கு ஏற்ற காலம் மாதவிடாய் காலம் ஆகும்; இந்த காலத்தில் உடலுறவு கொள்வதால் கருத்தரிப்பு நிகழாது.

உள்நுழைத்தல் எளிது!

ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்க உதவும் உள்நுழைத்தல் பொதுவான நேரங்களில் சற்று கடினமாக இருக்கலாம்; ஆனால் மாதவிடாய் காலங்களில் உறவு கொள்கையில் உள்நுழைத்தல் எளிதாக நிகழ்ந்து ஆணும் பெண்ணும் உறவில் உச்ச கட்டத்தை அடைய பெரிதும் உதவும்.!

தீராத மோகம்!

மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் பெண்களுக்கு அதிக உடலுறவு உணர்வு தோன்றி மேலோங்கும்; உறவை உச்சக்கட்டத்தில் அனுபவித்து மகிழ உகந்த காலம் மாதவிடாய் காலம் ஆகும்.

author avatar
Soundarya

Leave a Comment