நீரவ் மோடியின் 147 கோடி சொத்தை முடக்கியது அமுலாக்கத்துறை…!!

  • பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் வைத்து நிரவ் மோடி 12,000 கோடி மோசடி செய்ததாக அமுலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
  • மும்பையில் உள்ள நீரவ் மோடியின் 147 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மலக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி  இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவரை  கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிந்த அமுலாக்க துறையினர் மும்பையில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான 8 கார் ,  கட்டிடம் , தொழிற்சாலை உள்ளிட்டவையை  அமலாக்கத்துறையினர் கைப்பற்றி முடக்கியுள்ளனர். கைப்பற்றப்பட்ட இதன் மொத்த மதிப்பு சுமார்  147 கோடி ரூபாய் என்று அளவிடப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment