ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனை - பேரவையில் முதல்வர் பேச்சு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனத்தின் மேல் ஏறி நின்று காவலர்கள்

By dinesh | Published: Jul 19, 2019 05:46 PM

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனத்தின் மேல் ஏறி நின்று காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனைக்கதை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே 22 ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் வரும் போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி 13 பேரை காவல்துறை சுட்டு கொன்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.     இந்நிலையில், இன்று சட்ட பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி ஸ்டெர்லைட் புறத்தில் வாகனத்தின் மீதி ஏறி நின்று காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி உண்டா என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் காவல்துறையினர் வாகனத்தின் மீது ஏறி துப்பாக்கி சூடு நடத்தினர் என்று கூறுவது கற்பனைக்கதை என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc