ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை

By venu | Published: Nov 14, 2019 02:19 PM

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக இணையதள தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் வாயிலாக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதாவது திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் மூலமாக பதில் அளித்தார் .அதாவது மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலை பெற்று, ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில்  இன்று மீண்டும் இது குறித்து பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc