நான் புல்லட் ப்ரூஃப் அணியவில்லை …இந்த மார்பு ஆப்கானிஸ்தானுக்கும் எனது மக்களுக்கும் பலியிட தயார் ..

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் முடிவு பல தடைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவில் அதிபர் அஷ்ரப் கனி 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று  ஆப்கானிஸ்தான் அதிபராக 2-வது முறையாக பதவி ஏற்பதற்காக  பதவி ஏற்பு விழா காபூலில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று  அஷ்ரப் கனி பதவி ஏற்கும் விழா நடைபெற்றது.

அதிபராக அஷ்ரஃப் கனி பதவிப்பிரமாணம் ஏற்கத் துவங்கும் போது அருகில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு எதுவும் நிகழவில்லை.

<p

>

அதன் பின்னர் பேசிய அஷ்ரஃப் கனி “நான் புல்லட் ப்ரூஃப் துணிகளை அணியவில்லை. நான் சாதாரண துணிகளை அணிந்திருக்கிறேன். இந்த மார்பு ஆப்கானிஸ்தானுக்கும் எனது மக்களுக்கும் பலியிட தயாராக உள்ளது ” என கூறினார்.

author avatar
murugan