சச்சின் சாதனையை முதன் முதலில் முறியடித்த இக்ரம் அலி கில் !

சச்சின் சாதனையை முதன் முதலில் முறியடித்த இக்ரம் அலி கில் !

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதியது . இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் 93 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி அடங்கும். ஆப்கானிஸ்தான் அணியில் அதிக ரன்கள் குவித்தும் இக்ரம் அலி கில் தான். இந்நிலையில் 18 வயதில்  உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.மேலும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சாதனையையும் முறியடித்து உள்ளார். 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் வயது 18 அந்த  உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்து இருந்தார். அவரின் சாதனையை நேற்று முன்தினம் நடத்த போட்டி மூலம் இக்ரம் அலி கில் முதன் முறையாக முறியடித்தார்.