ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

  • பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள  ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை உள்ள  ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில்  தொடர்ச்சியாக சென்னை  ஐஐடியில் மாணவர்கள் மர்மமான முறையில் தொடர்ச்சியாக  உயிரிழந்துள்ளதால் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.நீதிபதிகள் சத்யநாராயணன்,சேஷசாயி விசாரித்தார்.அப்பொழுது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த மரணம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது .பின்னர் அரசு விளக்கத்தை ஏற்று நீதிபதிகள்  இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு  பிறப்பித்தனர்.