ஐஐடி மாணவி தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது - ஸ்டாலின் அறிக்கை

ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர்

By venu | Published: Nov 14, 2019 01:32 PM

ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது .சென்னை ஐஐடியின் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீர்வு போல உள்ளது.மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தாயாரின் கூற்று ,தமிழ் மண்ணின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது. கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.    
Step2: Place in ads Display sections

unicc