முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்-பிரதமர் மோடி அழைப்பு

முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர

By venu | Published: Sep 26, 2019 10:03 AM

முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு நடைபெற்றது.இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பணக்கற்று பேசினார்.அவர் பேசுகையில்,  மிகப்பெரிய உட்கட்டமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவில் கார்ப்பரேட் வரி ரத்து செய்யப்பட்டது வர்த்தகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.வரவிருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பிற்காக சுமார் 1.3 டிரில்லியன் டாலர்களை செலவிட உள்ளோம். இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு நம்பகத்தன்மையடையச் செய்து, இந்தியாவை தனித்துவமாக்கும் 4 காரணிகள், ஜனநாயகம், மக்கள்தொகை, தேவைகள் மற்றும் முடிவெடுத்தல்.மேலும் நிலக்கரி கிடைக்கும் 3-வது மிகப்பெரிய நாடு இந்தியா, நிலக்கரியை வாயுவாக மாற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் மாசு குறையும் என்று பேசினார்.
Step2: Place in ads Display sections

unicc