இதை குடித்தால் உடல் எடை குறையுமா….?

உடல் எடையை குறைப்பதற்காக பல மருத்துவ முறைகளையும், பல உணவு முறைகளையும் கைக்கொண்டு அலுத்து போயிருக்கலாம். ஆனால் நாம னைவரும் அறிந்த சத்தான ஒரு பணம் மோர். இது மிக எளிதில் மலிவாக கிடைக்கக்கூடியது. மேலும் இது உடலுக்கு, ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.

தோல்நோய்கள் :

Related image

 

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட மோர் ஒரு சிறந்த நிவாரணி எனலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் தனமாய் கொண்டது. சோர்வை போக்க வல்லது. மேலும் இது தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமான மோறன் மருத்துவ குணங்கள், மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம்.

கொழுப்பு :

Related image

 

நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி அசெளகரியமாக உணரும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்தால் பூரண சுகம் பெறலாம். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கக்கூடியது.

உடல் வறட்சி :

Image result for உடல் வறட்சி :

மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

புத்துணர்ச்சி :

Image result for புத்துணர்ச்சி :

 

மோரின் வைட்டமின்களான வைட்டமின் பி காம்பளார்ஸ், புரோடீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோபிளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.

தினமும் மோர் குடித்து வந்தால், உடல் பருமனை குறைத்து, தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment