இதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்!

வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை

By Fahad | Published: Apr 09 2020 04:58 PM

வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் சரியான உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் நிறைய நபர்களுக்கு வயிற்று புண்கள் ஏற்படுகின்றன.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனைகளில் அல்சரும் ஒன்றாகும். இதனை தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்த ஒன்றாகும்.இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வயிற்று புண்ணை சரி செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.
  • தினமும் காலையில் அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்பு சாற்றில் கலந்து குடுத்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.
  • ஒரு கிண்ணத்தில் சீரகம் ,தென்னை பாளைப்பூவுடன் சர்க்கரை சம அளவு எடுத்து கொண்டு நன்கு பொடியாக அரைத்து சிறிது எலுமிச்சை அளவு எடுத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்று புண் விரைவில் சரியாகிவிடும்.
  • கறிவேப்பிலை,சீரகம்,மஞ்சள்,மிளகு,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு பொடியாக அரைத்து அதை அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம்.
  • கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பை போட்டு வறுத்து அடுப்பை அனைத்து விட்டு மிதமான சூட்டில் மோரை ஊற்றி தெளிவை இருந்து பருகலாம்.

Related Posts