இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.!

இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகும்.

By bala | Published: Jun 24, 2020 08:00 AM

இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகும்.

மீன்களில் சுவையான மீன் என்றால் இறால் மீன் என்று கூறலாம், குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு மீன் இது இதில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது, இந்நிலையில் இந்த இறால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

இறாலில் மீனில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். மேலும் கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக் கூடும். இது தசைகளுக்கு ஆரோக்கியத்தையும் திடத்தையும் அளிக்கும்.

இறால் மீனை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவை அதிகரிக்கும், மேலும் இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது .

இறால் மீனில் புரதம், மற்றும் கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, மேலும் உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோ போரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

Step2: Place in ads Display sections

unicc