இனி அடையாள அட்டை , பாஸ்போர்ட் இருந்தால் தான் இவர்களுக்கு மது ..!

இனி அடையாள அட்டை , பாஸ்போர்ட் இருந்தால் தான் இவர்களுக்கு மது ..!

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை தடுக்க டாஸ்மாக்கில் 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என விதி உள்ளது. ஆனால் பல இடங்களில் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் மறைமுகமாக மது வாங்கி செல்கின்றனர்.

அதற்கேற்றார் போல் ஊழியர்களும் மதுவை கொடுத்து வருகின்றனர்.இதை  தடுக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இனி மது வாங்க வரும் நபர் 21 வயதிற்கு குறைவானவர் என்ற சந்தேகம் வந்தால் அவரிடம் அடையாள அட்டை , பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்படும்.

சந்தேகப்படும் நபர் 21 வயது குறைவாக இருந்தால் அவருக்கும் மது கொடுக்கக் கூடாது . அதேபோல் அவரின் முகவரி , பெயர் உள்ளிட்ட விவரங்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும்  தனி நோட் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்ட மேலாளர்கள் இப்பணியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 21 வயதிற்கு குறைவாக உள்ள இளைஞர்களுக்கு மது  கொடுக்கக்கூடாது என்று டாஸ்மாக் வேலைசெய்யும் ஊழியர்களுக்கும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடையில் சிசிடி கேமரா பொருத்திய பின் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube