சாப்பாடு இல்லாதால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர்,

By surya | Published: Sep 22, 2019 02:23 PM

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர், சந்தீப். இவர் அங்குள்ள ஒரு தபாவில் வழக்கமாக சாப்பிடும் செல்வார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் நேரமாகிவிட்டதால் உணவு இல்லை எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த கான்ஸ்டபிள் சந்தீப், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனை தொடர்ந்து கான்ஸ்டபிள் சந்தீப், அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சந்தீப் மீது ஐபிசி 307 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பித்து ஓடிய சந்தீப்பை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
Step2: Place in ads Display sections

unicc