நூதன தண்டனை…! மது குடித்துவிட்டு சென்றால் கிராமத்துகே மட்டன் பிரியாணி விருந்து..!

குஜராத்  மாநிலம் பனஸ்கந்த மாவட்டத்திலுள்ள கட்டி சித்தாரா என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வருகின்றனர். இங்கு உள்ள ஆண்கள் குடித்து விட்டு அடைத்தடியில் ஈடுபடுவது, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அந்த கிராம மக்கள் ஒரு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தனர்.
அந்த கட்டுப்பாடு என்னவென்றால் குடித்துவிட்டு வந்தால் ரூ.2,000 அதுவே குடித்து விட்டு தகராறு செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் மட்டன் பிரியாணி  விருந்து வைக்க வேண்டும்.
இந்த கிராமத்தில் இவர்களுக்கு மட்டன் பிரியாணி  போடவேண்டும் என்றால் குறைந்தது ரூ.30,000 வரை செலவு ஆகும்.இதனால் இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் குடிப்பது இல்லையாம். இந்த நூதன தண்டனை கடந்த 2014-ம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதாக பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி டங்கய்சா கூறியுள்ளார்.

author avatar
murugan