நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும்.! மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும்.! மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

  • 2020-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார்.
  • நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக 2020-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டு, இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில், எதிர்கட்சியினருக்கு பதிலளித்த முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக எதிர்கட்சியினர் தெரிவித்து வந்ததாக கூறினார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார். பின்னர் பதிலடி கொடுத்த ஸ்டாலின், 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது என்றும், இன்னும் மீதமுள்ள 9 மாவட்டம், நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், எஞ்சியுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான் மகத்தான வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube