முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக சேர்ந்து பயணிப்போம் என்று கமல் கூறினார்.இதற்கு பின்னர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், அவசியம் என்றால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்தார். இதனால் இருவரும் இவ்வாறு கூறிய நிலையில்,அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான்,யார் முட்டை என்று நான் சொல்லவில்லை. ஒன்றும்,ஜீரோவும் சேர்ந்தால்தான் அது நம்பர். யாரு முட்டை, யாரு நம்பர் என நான் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.